ஹோர்முஸ் நீரிணையில் மூழ்கிய கப்பல் - ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்து கொண்டிருந்த சிங்கப்பூர் கொடியைக் கொண்ட 'GFS Pride' என்ற கப்பல், கடல் கண்ணி வெடியில் சிக்கி மூழ்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பலில் பயணம் செய்த 21 மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது குறித்த வர்த்தகக் கப்பல் 2,500 கொள்கலன்களை ஏற்றிச் சென்றுள்ளது.

இந்தக் கப்பல் ஆபத்தான மற்றும் அனுமதியற்ற பாதையில் சென்றதாலேயே கண்ணி வெடியில் சிக்கியதாக ஈரான் புரட்சிகர காவல்படை (Iran's Revolutionary Guards) தெரிவித்துள்ளது.

இதேவேளை, விபத்துக்குள்ளான கப்பலில் உள்ள கொள்கலன்கள் கடலில் மிதந்து வருவதால், ஏனைய கப்பல்களுக்கும் கடல்வழிப் போக்குவரத்திற்கும் ஆபத்து ஏற்படக்கூடும்.

இதனால் அந்தப் பகுதி வழியாகச் செல்லும் உள்ளூர் கப்பல்களும் கடற்றொழிலாளர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஈரான் அறிவுறுத்தியுள்ளது.

Bootstrap