அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கேட்டி ஸக்காரியா (Katie Zacharia), கடந்த 12ஆம் திகதி திங்கட்கிழமை தனது பணியைத் ஆரம்பித்தார்.
பணியைத் ஆரம்பித்த அவர் முதன்முறையாக சுமார் 14 நிமிடங்கள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பில், ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் மற்றும் சாதனைகள் குறித்து அவர் விளக்கமளித்ததுடன், மூன்று ஊடக நிறுவனங்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
நான்கு குழந்தைகளுக்குத் தாயான அவரிடம், அரசுப் பணியின் கடுமையான பொறுப்புகளையும் குடும்ப வாழ்க்கையையும் எவ்வாறு சமாளிக்கப் போகிறார் எனக் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், தனது குடும்பத்தின் ஆதரவு இருப்பதாகவும், நான்கு குழந்தைகள் இருந்தபோதிலும் தன் திறமையின் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்பை வழங்கியதற்காக ட்ரம்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
இதற்கிடையில், அவரது முதல் செய்தியாளர் சந்திப்பின் நடைமுறை மற்றும் அவரது தொழில்முறைத் தகுதிகள் குறித்தும் அமெரிக்க ஊடகங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.