யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 5 பேர் பலி!

யேமனின் ஏடன் நகரில் உள்ள அல்-மாஷிக் ஜனாதிபதி மாளிகையை குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர்.

சர்வதேச ஊடகங்களின் செய்திப்படி, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாங்கத்தின் தலைமையகமாக விளங்கும் ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் மீது ஐந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கியுள்ளன.

இந்தத் தாக்குதல் நடைபெற்றபோது யேமனின் பிரதமரும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்த போதிலும், அவர்கள் எந்தவித காயமுமின்றி பாதுகாப்பாக தப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன

Bootstrap