கனடாவுடன் தொடர அல்பேர்ட்டா ஆதரவு! பொதுவாக்கெடுப்பில் ஸ்மித் அறிவிப்பு

அல்பேர்ட்டா மாகாணத்தில் நடைபெறவுள்ள பொதுவாக்கெடுப்பில், கனடாவுடன் தொடர்ந்து இணைந்திருப்பதற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

தனது சமூக ஊடகப் பதிவில், அல்பேர்ட்டா கனடாவின் ஒரு பகுதியாகத் தொடர்வதற்கு வாக்கெடுப்பின் 10ஆவது கேள்விக்கு Option 1-ஐத் தேர்ந்தெடுத்து ஆதரவளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, வாக்கெடுப்பின் முதல் ஒன்பது கேள்விகளுக்கும் YES என வாக்களிக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

முன்கூட்டிய வாக்குப்பதிவு சனிக்கிழமை வரை நடைபெறும் நிலையில், வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துமாறும் டேனியல் ஸ்மித் கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய அரசின் உமிழ்வு வரம்பு நீக்கப்பட்டமை, எரிசக்தித் திட்டங்களுக்கு Bill C-69 பொருந்தாத நிலை மற்றும் Pacific Link திட்டத்தின் முன்னேற்றம் ஆகியவற்றை எடுத்துக்காட்டியதுடன் அல்பேர்ட்டாவின் உரிமைகளுக்காக உறுதியாகப் போராடியதன் மூலம் பல்வேறு முன்னேற்றங்களைப் பெற்றுள்ளதாகவும் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

அல்பேர்ட்டாவின் நலன்களுக்கேற்ப முடிவுகளை எடுப்பதற்கு மாகாணத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், நிலையான குடியேற்றக் கொள்கைகளை முன்னெடுப்பதுடன் மக்களுக்கான சமூக சேவைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Bootstrap