ஆர்மீனியா ஈரானின் பாதுகாப்பிற்கு எதிராகச் செயல்படாது என்று தனக்கு உறுதியளிக்கப்பட்டதாக ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகையில், பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு குறித்து தெஹ்ரான் கவலை கொண்டுள்ளது என்றும், அதே சமயம் ஆர்மீனியா ஈரானின் பாதுகாப்பிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று தனக்கு உறுதியளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தெற்கு ஆர்மீனியா வழியாகச் செல்லும், அமெரிக்க ஆதரவு பெற்ற போக்குவரத்து மற்றும் வர்த்தக வழித்தடமான 'சர்வதேச அமைதி மற்றும் செழிப்புக்கான ட்ரம்ப் வழித்தடம்' (TRIPP) குறித்துக் குறிப்பிட்டார்.
நாங்கள் எங்கள் ஆர்மீனிய நண்பர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறோம். அவர்கள் ஈரானின் பாதுகாப்பிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியும் என்று அவர் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் இன்று, சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆர்மீனியாவில் இருந்ததைக் குறிப்பிட்ட அவர், நாங்கள் ஆர்மீனிய அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.