துருக்கியில் பெய்துவரும் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இஸ்தான்புல் மாகாணத்தில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, இஸ்தான்புல் மாகாணத்தின் சரியீர் மாவட்டம் கனமழை , வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.