தெற்கு யேமனில் உள்ள ஏடன் சர்வதேச வானுார்தி நிலையத்தை இரண்டு ஏவுகணைகள் தாக்கியுள்ளன.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து ஏற்றுமதி செய்ய உதவும் சவூதியின் முக்கிய எண்ணெய் மையமான செங்கடல் நகரான யான்புவை நோக்கிச் சென்ற பாலிஸ்டிக் ஏவுகணையொன்றைத் இடைமறித்து அழித்ததாக சவுதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணி தெரிவித்துள்ளது.
கூடுதலாக, செங்கடல் மீது இரண்டு க்ரூஸ் ஏவுகணைகளையும், சவூதி அரேபியாவின் தெற்கு மற்றும் ரியாத் பிராந்தியங்களில் மூன்று ஆளில்லா வானுார்திகளையும் அழித்துள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.