முக்கிய இரு பிரபலங்கள் தொடர்பில் கசிந்த இரகசியம்!

பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகளும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறன் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களின் காதல்குறித்த தகவல்கள் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது இருவரும் அதிகாரப்பூர்வமாகத் திருமண வாழ்க்கையில் இணையவுள்ளனர்.

இவர்கள் எதிர்வரும் நவம்பர் 11-ஆம் திகதி அன்று திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆரம்பத்தில் செஷல்ஸ் நாட்டில் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அழகிய சுற்றுலாத் தலமான கிரீஸ் நாடு இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இசை மற்றும் கிரிக்கெட் உலகைச் சேர்ந்த இரு முக்கிய பிரபலங்கள் இணையவிருப்பதால், திரைத்துறை வட்டாரத்திலும் கிரிக்கெட் வட்டாரத்திலும் இந்த நிகழ்வு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இவர்களுக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Bootstrap