திடீர் மின்வெட்டு: அம்பதலை மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு காரணமாக, அம்பத்தலை மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று (17) காலை ஏற்பட்ட மின்வெட்டையடுத்து, மின் விநியோகத்தை விரைவில் படிப்படியாக இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

மின்வெட்டுக்கான பிரதான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், நேற்று (16) கொத்மலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு இதற்குக் காரணமாக அமைந்ததா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Bootstrap