20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு பஸ் - 10 பயணிகள் காயம்

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் கருவலகஸ்வெவ, மீ ஓயா பாலத்திற்கு அருகில் சொகுசு பஸ் ஒன்று சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பயணிகள் காயமடைந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த சொகுசு பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மீ ஓயா பாலத்திற்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 10 பயணிகளும் சிகிச்சைக்காகப் புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் நிலவிய மழையுடனான காலநிலை காரணமாக சாரதியால் பஸ்ஸைக் கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பஸ்ஸில் 27 பயணிகள் பயணித்துக்கொண்டிருந்ததாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

Bootstrap