பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் - இசையமைப்பாளர் அனிருத் திருமணம் உறுதியாகியுள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சமீபமாகவே அவரது திருமணம் குறித்து நிறைய வதந்திகள் வலம் வந்தன.
அப்படி சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுடன் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது.
தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்புக்கு பிரபலங்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.
நேற்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்ததன் மூலம் அனிருத் - காவ்யா திருமணம் உறுதியாகியுள்ளது.
காவ்யா மாறன் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நவம்பர் 21 ஆம் திகதி சென்னையில் நடைபெற இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
திருமணத்தில் இரு குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடன் முக்கியமான பிரபலங்களும் கலந்துகொள்ள உள்ளதாகவும் இதற்காக 4 தனி வானூர்திகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.