காசாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த பிறகு இஸ்ரேலிய தாக்குதல்களால் 340க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பு

காசா பகுதியில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த பின்னரும் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் 340க்கும் மேற்பட்ட சிறுவ;கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் மேலும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் காயமடைந்துள்ளதாகவும், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 33க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, காசா பகுதியில் சுமார் 800,000 சிறுவர்கள் இன்னமும் இடம்பெயர்ந்த நிலையில் உள்ளதாகவும், குளிர்காலம் தொடங்கவுள்ள நிலையில் அவர்களின் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்றும் யுனிசெஃப் எச்சரித்துள்ளது.

Bootstrap