100 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட அரிய வகை "கிராண்ட் கொண்டே" (Grand Condé) இளஞ்சிவப்பு வைரம், பிரான்ஸில் உள்ள சாட்டோ டி சாண்டில்லி (Château de Chantilly) அருங்காட்சியகத்தில் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1926 ஆம் ஆண்டு ஒக்டோபரில் நடந்த கொள்ளையின் போது திருடப்பட்ட இந்த வைரம், துளையிடப்பட்ட ஆப்பிள் பழத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டது.
பின்னர், விடுதிப் பணிப்பெண் ஒருவர் அந்த ஆப்பிளைக் கடித்தபோது வைரம் தற்செயலாக மீட்கப்பட்டது.
ஐரோப்பிய அருங்காட்சியகங்களில் தொடர் கொள்ளைகள் நடந்துவரும் சூழலில், இந்த வைரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த விரிவான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வைரம் ஜனவரி 3 ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்படும்.
1740 முதல் வரலாற்றுப் பதிவுகளில் இடம்பெற்றுள்ள இந்த 9 கரட் பேரிக்காய் வடிவ வைரம், பிரெஞ்சுப் புரட்சியைத் தாக்குப் பிடித்த சில அரிய அரச நகைகளில் ஒன்றாகும்.