மாணவர் போராட்டத்தில் இணைந்த தொழிற்சங்கங்கள்: பிரான்சில் உச்சக்கட்ட பதற்றம்!

பிரான்சில் கல்வித் துறையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் நடத்தப்படுகின்ற பிரம்மாண்ட போராட்டங்களின் போது வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் ஐந்து இலட்சத்து 50 ஆயிரம் பேர் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் வன்முறைகள் பதிவாகியுள்ளன .

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகக் குறைந்தபட்சம் 1,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதை பிரான்ஸ் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் பாரிஸ் மற்றும் பல முக்கிய நகரங்களில் கலகத் தடுப்புக் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே இரவு வரை தீவிர மோதல்கள் நீடித்தன. கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்ட குழுக்கள் கட்டடங்கள், மற்றும் வாகனங்களை தாக்கி தீக்கிரையாக்கியுள்ளனர்.

ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் மேல்நிலைப் பாடசாலைகளின் பராமரிப்பின்மை போன்ற பிரச்சனைகளை முன்வைத்துத் தொடக்கத்தில் மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், பின்னர் தொழிற்சங்கங்களும், 2018 ஆம் ஆண்டு வாழ்க்கைச் செலவினத்திற்கு எதிராகப் போராடிய 'மஞ்சள் சட்டை' (Yellow Vests) இயக்கத்தினரும் இணைந்துகொண்டதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

Bootstrap