எரிபொருள் விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக கொந்தளிக்கும் மக்கள்!

எரிபொருள் விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் நடைபெறவுள்ள போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் இதுவரையில் 160 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போராட்டக்காரர்களில் சிலர் சூறையாடல்களில் ஈடுபட முயன்றதாகவும், காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள பிரான்ஸ் உள்துறை அமைச்சு, இந்த நடவடிக்கைகளை "திட்டமிடப்பட்ட வன்முறைச் செயல்கள்" எனக் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, பாரிஸில் இன்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:00 மணிக்கு பிரம்மாண்ட போராட்டப் பேரணி ஒன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனை (Emmanuel Macron) பதவிவிலக கோரி போராட்டக்காரர்கள் தீவிரமாக குரல் எழுப்பி வருவதாக BBC செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு முழுவதும் மூன்று வாரங்களாக நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இதில் தொழிற்சங்கங்கள் மற்றும் 'மஞ்சள் சட்டை' (Yellow Vest) இயக்கத்தின் முக்கிய தலைவர்களையும் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Bootstrap