உறைபனியில் 2 நாட்கள் : பாதுகாப்பாக மீட்கப்பட்ட லூலூ!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் பனிச்சரிவில் சிக்கி மாயமான பூடில்-ஹஸ்கி கலப்பின நாய்க்குட்டி ஒன்று 50 மணி நேர தீவிரத் தேடுதலுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

லாரன் என்பவருக்குச் சொந்தமான 'லூலூ' என்ற இந்த நாய்க்குட்டி, மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மாயமானது.

இந்த விபத்தில் மலையேற்ற வீரர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட போதிலும், நாய்க்குட்டியைக் காணவில்லை.

இதையடுத்து, 36-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர், மோப்ப நாய்கள் மற்றும் செயற்கைக்கோள் செயலியின் உதவிகளுடன் 2 நாட்களாகத் தீவிரத் தேடுதல் நடத்தினர்.

சுமார் 50 மணி நேரத் தேடுதலின் இறுதியில் உறைபனிக்கு இடையே சிக்கியிருந்த லூலூ நாய்க்குட்டி உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீட்கப்பட்ட நாய்க்குட்டிக்குக் கோரைப்பல் மற்றும் கால்விரலில் முறிவு ஏற்பட்டிருந்தாலும், சிகிச்சைக்குப் பின் அதன் உடல்நிலை சீராக உள்ளதாக உரிமையாளர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Bootstrap