'காவன்திஸ்ஸ' (Kavantissa) யானையின் இறப்பிற்கான மூலக் காரணங்கள் அடங்கிய பிரேதப் பரிசோதனை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கால்நடை அதிகாரிகளுக்கு கல்கமுவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், யானையின் இறப்பு குறித்து முறையான விசாரணையை நடத்துமாறு வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பிராந்திய அதிகாரிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் தந்தங்களை மீட்கும் வகையில், யானையின் உடலை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான நிலத்தில் பாதுகாப்பாகப் புதைப்பதை உறுதி செய்யுமாறு பதில் நீதவான் காஞ்சன ஹத்துருசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், 'காவன்திஸ்ஸ' யானை புதைக்கப்படும் இடத்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, உயிரிழந்த 'காவன்திஸ்ஸ' யானையின் பிரேதப் பரிசோதனை நேற்று இடம்பெற்றதுடன், மேலதிக ஆய்வுகளுக்காக யானையின் உடற்பகுதிகள் பேராதனை கால்நடை மருத்துவ பீடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.