'அக்போ' எனும் காட்டு யானையைக் கண்டறிய விசேட குழு!

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில், 'அக்போ' (Agbo) எனும் காட்டு யானையைக் கண்டறிந்து அதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஒரு பிரத்யேக இராணுவக் குழு களமிறக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையே நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் ஊடாக, இந்த யானையைக் கண்டறியும் முயற்சிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 'அக்போ' யானையைக் கண்டறிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒரு பிரத்யேக இராணுவக் குழுவை அனுப்பி வைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் குழு, யானை இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அதன் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bootstrap