பாகிஸ்தான் வான்வழி தடை நீட்டிப்பு

பாகிஸ்தான் அரசு, இந்திய விமானங்களுக்கு தனது வான்வழியை பயன்படுத்தும் தடை இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் படி, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் மற்றும் இந்திய விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இந்திய நிறுவங்களால் இயக்கப்படும் அல்லது குத்தகைக்கு விடுப்பட்டுள்ள விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியை நவம்பர் 24, 2026 வரை பயன்படுத்த முடியாது.

இந்த தடை முதன்முதலில் 2025 ஏப்ரல் 23 அன்று அமுல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAA) வெளியிட்ட அறிவிப்பில், இந்த தடை நவம்பர் 24, 2026 காலை 4:59 மணி வரை அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய விமான நிறுவனங்களுக்கு இது பெரிய சவாலாக உள்ளது. பாகிஸ்தான் வழியாக செல்லும் குறுகிய பாதைகள் மூடப்பட்டதால், இந்திய விமானங்கள் மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா செல்ல அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் எரிபொருள் செலவு அதிகரித்து, பயணிகளுக்கான டிக்கெட் விலை உயர வாய்ப்பு உள்ளது.

2019-இல் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தற்காலிகமாக இந்திய விமானங்களுக்கு தனது வான்வழியை மூடியது. 2025-இல் மீண்டும் தடை விதிக்கப்பட்டு, இப்போது தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது.

இது இரு நாடுகளுக்கிடையிலான அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றத்தின் பிரதிபலிப்பாகக் கருதப்படுகிறது. இந்த நீட்டிப்பு, இந்திய விமானப் போக்குவரத்துக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்துவதோடு, பயணிகளின் செலவையும் அதிகரிக்கிறது.

Bootstrap