அவதார் திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்த ‘Avengers: Endgame’ அவதார் திரைப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் வாழ்த்து!

உலக அளவில் அதிக வசூல் குவித்த திரைப்படம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள 'Avengers: Endgame' திரைப்படக் குழுவினருக்கு, 'அவதார்' திரைப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் 'ENCORE' என்ற பெயரில் மீண்டும் திரையரங்குகளில் (Re-Release) வெளியிடப்பட்ட 'Avengers: Endgame' திரைப்படம், உலகளவில் அதிக வசூல் செய்திருந்த 'அவதார்' திரைப்படத்தின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்தத் வரலாற்றுச் சாதனையைப் பாராட்டி, அவதார் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் 'Avengers: Endgame' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Bootstrap