இஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகுவுக்கு முழு ஆதரவு: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு!

இஸ்ரேலில் எதிர்வரும் ஒக்டோபர் 27 அன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் வெற்றி பெற எனது முழு ஆதரவும் உண்டு என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் பொதுத் தேர்தலை முன்னிட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ளார்.

நெதன்யாகு ஒரு சிறந்த போர் வீரர் என்றும், ஈரானுக்கு எதிராக அவர் மிக துணிச்சலாகச் செயல்பட்டுள்ளார் என்றும் ட்ரம்ப் புகழ்ந்துரைத்துள்ளார்.

இஸ்ரேலியர்கள் வேறு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்தால், ஈரானை அமெரிக்காவே தனியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரிக்கும் வகையில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

Bootstrap