பிறந்த உடன் ‘கூல் போஸ்’ கொடுத்து அசத்திய குழந்தை - உலகளவில் வைரலான காணொளி

பிறந்த சில மணி நேரங்களிலேயே எந்த ஒரு சலனமும் இன்றி, பெரியவர்கள் ஓய்வெடுப்பது போல படுத்துக்கொண்டு ‘கூல் போஸ்’ கொடுத்து அசத்திய குழந்தை தற்போது பேசுபொருளாகியுள்ளது.

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் உள்ள ஒரு வைத்தியசாலையில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

அங்கு பிறந்த சில மணி நேரங்களான ஒரு பச்சிளம் குழந்தைக்கு, மருத்துவர்கள் தங்களின் வழக்கமான ஸ்டெதாஸ்கோப் பரிசோதனைகளை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது மருத்துவ படுக்கையில் படுத்திருந்த அந்த குழந்தை, சற்றும் பதற்றமோ பயமோ இன்றி, தனது இரண்டு கைகளையும் தலைக்கு பின்னால் முட்டு கொடுத்துக் கொண்டு, கால்களை ஒன்றின் மேல் ஒன்றாக போட்டபடி செம ‘கூல்’ ஆக படுத்திருந்தது.

இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த அங்கிருந்த குழந்தை நல மருத்துவர், அதனை காணொளியாக எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த காணொளி இணையத்தில் பரவி உலகளவில் வைரலாகி வருகிறது.

Bootstrap