ஹூதிகளின் இலக்குகள் மீது தாக்குதல்கள் - யேமன் அறிவிப்பு

யேமனின் தாயிஸ் விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் நிலைகள் மீது நான்கு வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக யேமன் அரசுப் படைகள் தெரிவித்துள்ளன.

ஹூதிகளின் ஏவுகணை தாக்குதல் திறனைக் குறைப்பதையும், விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவர்களின் இராணுவ நிலைகளை இலக்காகக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தாக்குதல்களில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தவர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

Bootstrap