ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், போர் தொடங்கிய பின்னர் தனது முதல் விஜயமாக ஈரானின் தலைநகர் தெஹ்ரானைச் சென்றடைந்துள்ளதாக ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) அதிகாரிகளுடனான சந்திப்புகளை பஹ்ரைனில் நிறைவு செய்த பின்னர் அவர் ஈரானுக்குச் சென்றுள்ளார்.
இந்த விஜயத்தின்போது ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோரைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில், இம்மாதத் தொடக்கத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஈரான் ஜனாதிபதி பெசெஷ்கியானுடன் நடத்திய உரையாடலின்போது, மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் மத்தியஸ்த முயற்சிகளில் பங்களிக்க மொஸ்கோ தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்தப் பின்னணியில் லாவ்ரோவின் ஈரான் விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.