அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வெளியே, சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான ஹெலன் ஹெய்ன்ஸ் வாகனத்தால் மோதப்பட்டு தீவிர காயமடைந்துள்ளதாக அந்த நாட்டுப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
கார் நிறுத்துமிடத்தில் தனது காரின் பின்புறப் பெட்டியிலிருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தபோது, அவர் மீது வாகனம் மோதியுள்ளது.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்திற்குள் இருந்து பொலிஸார் கத்தி ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
கடும் காயமடைந்த ஹெலன் ஹெய்ன்ஸ் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸ் பிரிவினரும் பொலிஸ் புலனாய்வாளர்களும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.