முற்றிலும் மாறுபட்ட உலகத்தைச் சேர்ந்த, இதயங்களில் வெறுப்பை சுமந்து திரியும் மக்களின் வருகை, ஒரு காலத்தில் மிகச்சிறந்த நாடாக விளங்கிய பிரான்ஸை சீரழித்துவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
பிரான்ஸ் கலவரம் குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவர் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "பிரான்ஸ் நாடுதற்போது எரிந்து கொண்டிருக்கிறது. நிலைமை கையை மீறிச் செல்வதற்குள் உங்கள் நாட்டின் எல்லைகளை மூடி, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள்."எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி.வென்ஸும் இக்கலவரத்திற்குப் புலம்பெயர்ந்தோரே காரணம் என மறைமுகமாகச் சாடியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,"மேற்கத்திய தாராளவாதிகள் பன்முகத்தன்மை மற்றும் இரக்கத்தின் பெயரால் பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளுக்குள் மூன்றாம் உலக மக்களை இறக்குமதி செய்தனர்.
ஆனால், அவர்கள் அந்த மக்களின் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் இணக்கத்தன்மை போன்ற அடிப்படைக் கேள்விகளைப் புறக்கணித்துவிட்டனர்.
இதன் விளைவு இப்படித்தான் இருக்கும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் கேட்கவில்லை. அமெரிக்கர்கள் இதைக் கவனித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.