நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட உயிரிழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரான மறைந்த சபேஷின் மகனும், திரைப்பட நடிகருமான கார்த்திக் சபேஷ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.

கடந்த ஆண்டு இசையமைப்பாளர் சபேஷ் மற்றும் கடந்த சனிக்கிழமை இசையமைப்பாளர் தேவா ஆகியோர் மறைந்த நிலையில், தற்போது ஒரே குடும்பத்தில் மீண்டும் நடிகர் கார்த்திக் சபேஷ் உயிரிழந்துள்ளார்.

இவர் 'உதயம் NH4', 'பர்மா', 'பட்டத்து யானை' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap