டெஸ்லா ரோட்ஸ்டர் கார் - எலான் மஸ்க் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

டெஸ்லா ரோட்ஸ்டர் கார் வாடிக்கையாளர்களுக்கு எப்போது கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா ரோட்ஸ்டர் கார் கடந்த 2017 ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டது. தற்போது 2028 ஆம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, ரோட்ஸ்டர் காரை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் அதன் பயன்பாடு மற்றும் விநியோகம் குறித்து எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில், ரோட்ஸ்டர் கார் தற்போது உருவாக்கப் பணியில் இருப்பதாகவும், வாடிக்கையாளர்கள் அதை எங்கு ஓட்ட முடியும் என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மின்சார கார்களைத் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ரோட்ஸ்டர் கார் அறிமுக நிகழ்ச்சி, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சோதனை மையத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில், டெஸ்லா ரோட்ஸ்டர் காரின் அறிமுகம் மற்றும் உற்பத்தி தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

ரோட்ஸ்டர் கார் அறிமுக நிகழ்ச்சியில், ரோட்ஸ்டர் காரின் சாகசக் காட்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.

ரோட்ஸ்டர் காரைச் வீதிகளில் பயன்படுத்த முடியுமா என்பது, வாடிக்கையாளர்கள் செல்லும் வீதியை பொறுத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Bootstrap