இந்தியா-நியூசிலாந்து இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) இன்று (20) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், நியூசிலாந்து அனைத்து இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளையும் நீக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 17வது செயல்பாட்டு சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான, இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்கள், மாணவர்கள் மற்றும் திறன்மிக்க பணியாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கு வழிவகுத்துள்ளதாக குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த ஒப்பந்தம், ஜவுளி, ஆடைகள், தோல் பொருட்கள், தரைவிரிப்புகள், பீங்கான் பொருட்கள், பொறியியல் பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் போன்ற துறைகளுக்குப் பயனளிக்கும்.
மேலும், சேவைகள் துறையைப் பொறுத்தவரை, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி, நிதிச் சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட 118 துறைகளில் நியூசிலாந்து தனது உறுதிப்பாடுகளை வழங்கியுள்ளது.