இஸ்ரேலில் நெதன்யாகுவைச் சந்தித்த அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பிட் ஹெக்செத் திடீர் பயணத்தின்போது சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு, இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள விமானப்படைத் தளத்தில் சந்திப்பு நடைபெற்றதாக இஸ்ரேலிய இராணுவ வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலில் நடைபெறவுள்ள முக்கியமான பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பு அரசியல் ரீதியாகக் கவனம் பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான போரில் நெதன்யாகுவின் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதேவேளை, அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், இஸ்ரேலியத் தேர்தலில் தலையிட விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய கருத்துக்கணிப்புகளின்படி, நெதன்யாகுவின் ஆளும் கூட்டணி பாராளுமன்றப் பெரும்பான்மையை இழக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Bootstrap