அமெரிக்கா-ஈரான் போருக்கு இராணுவ ரீதியான தீர்வு இல்லை! கட்டார் தெரிவிப்பு

அமெரிக்கா – ஈரான் இடையிலான போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்வை எட்டுவதே கட்டாரின் எதிர்பார்ப்பு என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில்,“விரைவில் தீர்வொன்றை எட்டுவதற்கு நாம் நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும். அதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதுடன், தீர்வை எட்டுவதற்குத் தேவையான விடயங்கள் குறித்தும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

மேலும், இராணுவ நடவடிக்கைகள் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என வலியுறுத்திய அவர், பதற்றத்தை மேலும் அதிகரிப்பதைத் தவிர்த்து, அமைதியான தீர்வொன்றை எட்டுவதற்கான வாய்ப்புகள் திறந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.”என கூறியுள்ளார்.

Bootstrap