சவூதி,பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் - பாராளுமன்ற ஒப்புதலுக்கு சமர்ப்பித்தது துருக்கி!

சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கான சட்ட முன்மொழிவை துருக்கி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த முன்மொழிவு முதலில் பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவில் விவாதிக்கப்பட்ட பின்னர், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஓகஸ்ட் மாதம் மூன்று நாடுகளும் மக்காவில் நடைபெற்ற கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள ஒரு நாட்டின் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகளின் பாதுகாப்பையும் பாதிக்கும் தாக்குதலாகக் கருதப்படும்.

இந்நிலையில், இந்த ஒப்பந்தம் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

Bootstrap