எதிர்வரும் சனிக்கிழமை திட்டமிடப்பட்டுள்ள புதிய போராட்டடங்களை எதிர்கொள்ள பொலிஸாருடன் இராணுவத்தினரையும் களமிறக்கவுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த வார இறுதியில் பாரிஸ், மார்செய், லியோன் உள்ளிட்ட நகரங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தத் தவறியதையும் பிரான்ஸ் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டடங்களைக் கட்டுப்படுத்துவதற்காகப் பாரிய பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும், நிலைமையை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவருவதே அரசாங்கத்தின் உடனடி முன்னுரிமை எனவும் பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, லிமோஜஸ் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபத்துக்குத் தீ வைத்ததாகக் கூறப்படும் ஒருவர் செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பாதுகாப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தீவிர இடதுசாரிக் குழுவொன்றைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.