ஈரானின் மீது தடைகளை விதித்து, அந்நாட்டை அச்சுறுத்திக்கொண்டே, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா எதிர்பார்க்க முடியாது என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன்எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானிய அரசு ஊடகங்களில் வெளியான கருத்துகளின்படி, அமெரிக்கா எங்கள் தேசத்தின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். அத்துடன் தனது மிரட்டல்களையும் ஆக்கிரமிப்புச் செயல்களையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாங்கள் அமர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும் என்று அவர் தெரிவித்தார்.
அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டு, மிரட்டல்களை விடுத்துக்கொண்டே, அதே நேரத்தில் பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா தான் செய்துகொண்ட ஒப்பந்தங்களிலிருந்து பின்வாங்கிவிடுகிறது என்று பெசெஷ்கியன் குறிப்பிட்டார்.
ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபடும்போது அதை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நான் கருதுகிறேன். ஆனால், ஒருமுறை ஒப்பந்தம் செய்துகொண்டால், அது தங்களுக்குச் சாதகமற்றதாக இருந்தாலும் சரி, இறுதிவரை அந்த ஒப்பந்தத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.