காஸா பகுதியின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 2025 இல் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட போதிலும், அதன்பின்னர் நடைபெற்ற இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 1,534 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன், 5,486 பேர் காயமடைந்துள்ளனர்.
இதே காலகட்டத்தில் கட்டட இடிபாடுகளுக்கு அடியிலிருந்து 841 பேரின் உடலங்கள் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளன.
ஒக்டோபர் 2023 முதல் தொடங்கும் இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளில் இதுவரை மொத்தம் 74,494 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன், 1,75,604 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.