இன்றைய ராசிபலன் - அக்டோபர் 22, 2026 வியாழன்

பஞ்சாங்கம்

நாள் வியாழக்கிழமை
திதி ஏகாதசி பகல் 12.30 வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் சதயம் இரவு 7.30 வரை பிறகு பூரட்டாதி
யோகம் மரணயோகம் இரவு 7.30 வரை பிறகு சித்தயோகம்
ராகுகாலம் பகல் 1.30 முதல் 3 வரை
எமகண்டம் காலை 6 முதல் 7.30 வரை
நல்லநேரம் பகல் 12.15 முதல் 11.15 வரை
சந்திராஷ்டமம் பூசம் இரவு 7.30 வரை பிறகு ஆயில்யம்
சூலம் மேற்கு
பரிகாரம் தைலம்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் நிறைவேறும். வெற்றி அதிகமாக கிடைக்கக்கூடிய நாள். இன்று பல வழிகளில் உங்களுக்கு தன வரவு ஏற்படும். உங்களுடைய கலை திறமை அதிகரிக்கும். சில விஷயங்கள் மீது உங்களுடைய ரசனை தன்மை மாறுபடும். இன்று சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது அல்லது உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடக் கூடிய நாள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் செய்யக்கூடிய உத்தியோகத்தில் மதிப்பு உயரும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்க கூடிய நாள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கக்கூடிய நாள். வரவுகள் அதிகமாக இருந்தாலும் செலவுகளும் தொந்தரவு தரும். தொலைதூர பயணங்கள் செல்ல வாய்ப்புகள் உண்டு. மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான புதிய வாய்ப்புகள் பெறுவார்கள். புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.ஒரு செயல்களில் ஒரு தெளிவு பிறக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று தந்தை வழியில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கக்கூடிய நாள். ஆன்மீகத்தின் மீதான பற்று அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நாள். உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சமூக பணிகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இன்று எந்தவித வாக்குவாதங்களிலும் ஈடுபடுவதை தவிர்க்கவும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுக்குள் வரும்.எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுடைய புதிய முயற்சிகளை தவிர்க்கவும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். உங்களுடைய திட்டமிட்ட பணிகளை செய்து முடிக்க தாமதம் ஏற்படலாம். இன்று எதிலும் பொறுப்புடன் செயல்படவும். உங்களுடைய சிந்தனையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். திடீர் செலவுகள் உங்களுக்கு சிக்கலை தர வாய்ப்புகள் உண்டு. அதனால் செலவு விஷயத்தில் நிதானமான அணுகுமுறை தேவை.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு, உங்கள் துணையின் மூலம் மகிழ்ச்சியும் ஆதரவும் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்யக் கூடியவர்களுக்கு சாதகமான நாள். இன்று செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. தந்தை வழி உறவுகள் மூலம் ஆதரவு கிடைக்கும். மேலும் சொத்து தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக தீரும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பிணக்குகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடு தொடர்பான வர்த்தகங்களில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பாக மேன்மையான சூழல் ஏற்படும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய தடைகளைத் தாண்டி வெற்றி அடையக்கூடிய நாள். நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரம் தொடர்பான எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியம் மேம்படக்கூடிய நாள். தடை பட்ட காரியங்களை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகளை குறைப்பதற்கான வழியை தேடுவீர்கள். உடன் இருப்பவர்களின் உணர்வுகள் அல்லது தன்மையை புரிந்து செயல்படவும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கவும் அவர்கள் மூலம் சில நல்ல செய்திகளிடம் கிடைக்கும். குடும்ப உறவு மேம்படும். உங்களுடைய சேமிப்பை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடவும். உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரத்தை பெறுவீர்கள். கலை துறையில் நீங்கள் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ள கூடிய வெளியூர் பயணங்கள் மேன்மையை தரக்கூடியதாக அமையும். இன்று உங்களுடைய முயற்சியை அதிகரிக்க வேண்டிய நாள்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று அலைச்சல் அதிகரிக்கக்கூடிய நாள். பயணம் செய்யக் கூடியவர்கள் நிதானமாக வண்டியை இயக்கவும். உங்கள் தாயின் உடல் ஆரோக்கியத்தை கவனம் தேவைப்படும். மனதில் புதுவித சிந்தனைகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். தொழில் நுட்ப செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். உங்கள் எதிர்காலம் தொடர்பாக முதலீடு, சேமிப்பு விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் வேலை தொடர்பாக இருந்து வந்த தடைகள் குறையும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எதையும் சாதிக்கக்கூடிய மன தைரியம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரக்கூடியதாக இருக்கும். இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இன்று உங்களுடைய உடல் நலனில் சோர்வாக உணர்வீர்கள். இன்று உங்களுடைய நிலை மேம்படும். தொழில் தொடர்பான முயற்சிகள் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். இன்று புதிய தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வது அல்லது செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். முன்னோர்கள் சொத்து வழியில் நீங்கள் ஆதாயம் அடைய வாய்ப்பு உண்டு.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. இன்று வீட்டில் சில நல்ல காரியங்கள் நடக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கலாம். இன்று உங்கள் பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வழிகளில் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். தனவரவு அதிகரிக்க கூடிய நாள். இன்று உங்கள் செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறக்கூடியதாக இருக்கும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று இன்று நீங்கள் எந்த செயலை செய்வதாக இருந்தாலும், முடிவு எடுத்தாலும் அதில் நிதானம் தேவை. உணர்ச்சி வசப்படுவதை தவிர்த்து நிதானமாக செயல்படவும். திட்டமிட்ட செயல்பாடுகளில் நீங்கள் எதிர்பார்த்த பலனை பெறுவீர்கள். எதிலும் வேகத்துடன் செயல்பட்டால். வெற்றி அதிகரிக்க கூடிய நாள். உங்கள் மனதில் தெளிவான நிலை இருக்கும். வாழ்க்கை துணையுடன் பயணிக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் வேலை அல்லது குடும்ப விவகாரங்கள் தொடர்பாக அலைச்சல் சந்திக்க வாய்ப்புகள் உண்டு. பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சுப விரையங்கள் ஏற்படும். அதே சமயம் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இன்று உங்களுக்கு நிம்மதியான தூக்கம் கிட்டும். மற்றவர்களின் தேவைகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நாள். மாணவர்கள் தேர்வு, போட்டிகளில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். இன்று நீண்ட நாட்களாக இருக்க கூடிய தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். இன்று உங்கள் பேச்சு இனிமையால் அனைவரையும் வெல்லவாய்ப்பு உண்டு. யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும்.

Bootstrap