செயற்கை நுண்ணறிவு செலவினங்களை அதிகரிக்க மெட்டா புதிய பங்குகளை வெளியிட முடிவு!

செயற்கை நுண்ணறிவு (AI) துறையிலான விரிவாக்கப் பணிகளுக்காக, வாக்குரிமையற்ற புதிய வகை பங்குகளை வெளியிட உள்ளதாகவும், தனது வருடாந்திர முதலீட்டு இலக்கை உயர்த்தியுள்ளதாகவும் மெட்டா நிறுவனம் நேற்று (21) அறிவித்துள்ளது.

பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்கின்(Mark Zuckerberg) வாக்குரிமை மற்றும் கட்டுப்பாடுகள் பாதிக்கப்படாத வகையில், திறமையான அதிகாரிகளை ஈர்க்கவும் புதிய நிறுவனங்களைக் கைப்பற்றவும் வாக்குரிமையற்ற பங்குகள் நிதி திரட்டப் பயன்படுத்தப்படும்.

ஓபன்ஏஐ (OpenAI) மற்றும் ஆன்த்ரோபிக் (Anthropic) போன்ற நிறுவனங்களுக்கு இணையான போட்டியை எதிர்கொள்ள, நினைவகத் தொகுதிகள் (Chip) மற்றும் தரவு மையங்களுக்கான தனது வருடாந்திர முதலீட்டு செலவினத்தை 135 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் 145 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை உயர்த்தியுள்ளது.

சந்தை கணிப்புகளை மிஞ்சி, நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 64.60 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. 'மியூஸ்' (Muse) போன்ற AI கருவிகளின் வரவேற்பு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா விவகாரம் தொடர்பான வழக்கில், பயனர் தரவு மற்றும் கொள்கைகள் குறித்து தவறாக வழிநடத்தியதற்காக நியூ மெக்ஸிகோ நீதிமன்றம் மெட்டா நிறுவனத்திற்கு 25 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதேவேளையில், விளம்பர வருவாய் மற்றும் 'ரீல்ஸ்', 'த்ரெட்ஸ்' போன்ற தளங்களின் மூலமாக மெட்டா தொடர்ந்து தனது வர்த்தக ஆதிக்கத்தை தக்கவைத்து வருகிறது.

Bootstrap