பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்!

பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் தனது 75ஆவது வயதில் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

1989ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இவர், 300 இற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.

குறிப்பாக, ‘பொற்காலம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ என்ற பாடல் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.

சென்னையின் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.

Bootstrap