வெள்ளத்தால் சூழப்பட்ட கொழும்பு - முக்கிய வீதிகள் முடக்கம்

பலத்த மழை காரணமாக கொழும்பு, ஆமர் வீதி – பாபர் சந்தி பகுதி நீரில் மூழ்கியுள்ளதால், அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக புளூமெண்டல், பொரளை டி.எஸ். சந்தி மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளை அண்மித்த வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துவதுடன், பயணங்களின்போது அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Bootstrap