தற்காலிக போர் நிறுத்தம் - பச்சைக்கொடி காட்டிய உக்ரைன்!

போரைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, தூதரக ரீதியிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தான் முழு ஆதரவு அளிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகருக்குச் சென்ற உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, அங்கு அமெரிக்கச் சிறப்புத் தூதுவர் ஸ்டீவ் விட்காபை நேரில் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போதே ஜெலென்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் உக்ரைன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஆகிய 3 பேரும் இணைந்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் அவசியம் என்றும் கூறினார்.

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகளையும் சேர்த்துக் கொள்வது நல்லது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தற்போதைய தூதரக முயற்சியால் ரஷ்யாவிடம் இருந்து விரைவில் நல்ல முடிவு வரும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Bootstrap