ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படை (IRGC), வளைகுடாப் பகுதியில் நான்கு கப்பல்களைத் தாக்கியதாகவும், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் மேலும் மூன்று கப்பல்கள் கண்ணிவெடிகளில் சிக்கியதாகவும் தெரிவித்துள்ளது.
வளைகுடாப் பகுதியில் கப்பல்களுக்கு இடையே எண்ணெய் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்த நான்கு கப்பல்களையே இவ்வாறு தாக்கியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படை (IRGC) கடற்படை தெரிவித்துள்ளது. தாக்குதலுக்குள்ளான அந்தக் கப்பல்களில் தீப்பிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹோர்முஸ் நீரிணைக்கு மேற்கே மூன்று கப்பல்கள் கண்ணிவெடிகளில் சிக்கியதாகக் குறிப்பிட்டுள்ள IRGC, அமெரிக்க இராணுவம் பதற்றத்தை மேலும் அதிகரித்தால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களுக்கு எதிராக நேரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.