ஈரான் மீது புதிய போரைத் தொடங்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லாபிட் அவரைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவருடைய எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்த யாயிர் லாபிட், நெதன்யாகு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து பொறுப்பற்ற முறையில் கருத்துகளை வெளியிடுவதைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நெதன்யாகு இஸ்ரேலின் பாதுகாப்பைத் தேர்தல் கேலிக்கூத்தாக மாற்றுகிறார். இஸ்ரேலின் வரலாற்றிலேயே மிக நீண்ட தொடர்ச்சியான பாதுகாப்புத் தோல்விகளுக்குப் பொறுப்பானவர் இந்த மனிதர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சிக் கூட்டணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் யாயிர் லாபிட், பிரதமர் நெதன்யாகுவின் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் அவரது தலைமையின் கீழ் ஏற்பட்டதாகக் கூறப்படும் பாதுகாப்புத் தோல்விகள் குறித்து இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.