ஓமான் கடற்கரைப் பகுதியில் கண்டறியப்பட்ட ஒரு அரிதான இளஞ்சிவப்பு (Pink) டொல்பின், வனவிலங்கு ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவின் குருகிராமில் உள்ள DCC விலங்கு மருத்துவமனை மற்றும் செல்லப்பிராணி பராமரிப்பு மையத்தின் கால்நடை சேவைகளின் இயக்குநர் மற்றும் தலைவர் வினோத் ஷர்மாவின் கூற்றுப்படி, சில டொல்பின் இனங்களில் இளஞ்சிவப்பு நிறம் இயற்கையாகவே ஏற்படலாம், ஏனையவற்றில் இது நிறம் அசாதாரணங்களுடன் (Pigmentation abnormalities) தொடர்புடையதாக இருக்கலாம்.
பிரேசில், பெரு, கொலம்பியா, பொலிவியா மற்றும் வெனிசுலா உள்ளிட்ட நாடுகளின் நதிகளில் இந்த டொல்பின்கள் வாழ்வதாக உலக வனவிலங்கு நிதியம் (WWF) குறிப்பிடுகிறது.
இவற்றின் எண்ணிக்கைகள் பல்லாயிரக்கணக்கில் இருந்தாலும், சில கூட்டங்கள் அணைகள், வாழ்விடத் துண்டாடுதல் மற்றும் நதி மாசுபாடு போன்ற குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.
கடல் சூழல்களில், இந்தோ-பசிபிக் ஹம்ப்பேக் டொல்பின் (Indo-Pacific humpback dolphin - சீன வெள்ளை டொல்பின் என்றும், இவை அழைக்கப்படுகின்றன முதலில் “இந்த டொல்பின்கள் சாம்பல் நிறத்தில் பிறக்கின்றன, மேலும் அவை முதிர்ச்சியடையும் போது படிப்படியாக இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தை அடைவதாக ஷர்மா விளக்கமளித்துள்ளார்.
பொட்டில்நோஸ் டொல்பின்கள் (Bottlenose dolphins) உட்பட பிற டொல்பின் இனங்களில், நிறமி குறைபாடு காரணமாக வழக்கத்திற்கு மாறான வெளிறிய அல்லது இளஞ்சிவப்பு தோற்றம் ஏற்படலாம். வெளிறிய தோலுக்கு கீழே தெரியும் இரத்த நாளங்களும் இந்த தோற்றத்திற்கு பங்களிக்கக்கூடும் என்று வினோத் ஷர்மா குறிப்பிட்டுள்ளார்