ஹெப்ரோனில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த பகுதிக்கு அருகில் உள்ள ஏராளமான பாலஸ்தீனியக் கட்டிடங்களை இடிக்குமாறு, இஸ்ரேலின் தீவிர வலதுசாரி நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஹெப்ரோனின் வடக்கு நுழைவாயிலில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில்,தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டனர். மேலும், ஆறு இஸ்ரேலிய வீரர்கள் காயமடைந்தனர்.