உலகெங்கிலும் உள்ள சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான வெப்சைட்களின் முதுகெலும்பாக விளங்கும் பி.எச்.பி., (PHP) புரோகிராமிங்கில் ஏற்பட்ட ஒரு பயங்கர பாதுகாப்பு குறைபாட்டால், உலகின் பல்வேறு நாடுகளின் அரசுத் துறைகளும், பெருநிறுவனங்களும் கதிகலங்கிப் போயுள்ளன.
வெப்சைட்களை வடிவமைக்கவும், இயக்கவும் உலகளவில் மிக முக்கியமாகப் பயன்படுத்தப்படுவது பி.எச்.பி.., என்ற புரோகிராமிங் லாங்வேஜ்.
சர்வதேச அளவில் பயன்பாட்டில் இருக்கும் வெப்சைட்களில், சுமார் 70 சதவீதம், இந்த பி.எச்.பி.,யை, அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றன.
இந்நிலையில், ஏ.ஐ., தொழில்நுட்ப ஆய்வின் போது, இந்த பி.எச்.பி.,யில், மிக ஆபத்தான பாதுகாப்பு ஓட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை சாதகமாகப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் தொலைதூரத்திலிருந்தே சர்வர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தகவல் திருட்டு உள்ளிட்ட நாசவேலைகளில் ஈடுபட முடியும் என தெரியவந்துள்ளது.
எச்சரிக்கை:
இது குறித்து அமெரிக்க உளவு அமைப்பான எவ் .பி.ஐ., மற்றும் ஐரோப்பிய யூனியனின் சைபர் பாதுகாப்பு, அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன.
வெப்சைட்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள், உடனடியாக பாதுகாப்பு அப்டேட்களை (Patch) நிறுவ வேண்டும் என, உத்தரவிட்டுள்ளன. சமீப காலத்தில் இன்டர்நெட் உலகம் சந்தித்த மிக ஆபத்தான அச்சுறுத்தல் இது என, ஓபன் ஏ.ஐ. நிறுவனமும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இணைய வல்லுநர்கள் கூறியதாவது:
நிறுவனங்கள் மற்றும் வெப்சைட் நிர்வாகிகள் உடனடியாக தங்கள் பி.எச்.பி., வெர்ஷன்களை ஆய்வு செய்ய வேண்டும். புதிய பாதுகாப்பு அப்டேட்கள் மற்றும் 'பேட்ச்'களை உடனடியாக இன்ஸ்டால் செய்ய வேண்டும். சர்வர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 2FA அங்கீகாரத்தை அமுல்படுத்த வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும், இலட்சக்கணக்கான மக்களின் இரகசிய தரவுகளுக்கு பேராபத்து ஏற்படும். இவ்வாறு எச்சரித்துள்ளனர்.
இன்டர்நெட் உலகின் இந்த திடீர் அலர்ட், உலகம் முழுதும் உள்ள ஐ.டி., வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.