சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 16 பேர் உயிரிழப்பு - 32 பேர் காயம்

சீனாவின் தென்மேற்கு பிராந்தியமான திபெத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்த 32 பேரில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவில் 7.0ஆகப் பதிவாகியுள்ளது.

நாக்ஷு (Nagqu) நகருக்கு வடகிழக்கே சுமார் 190 கி.மீ தொலைவிலும், திபெத்தின் தலைநகரான லாசாவிற்கு (Lhasa) வடகிழக்கே 390 கி.மீ தொலைவிலும் உள்ள மலைப்பகுதியில், 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்கத்தை அடுத்து அந்தப்பகுதியில் இரண்டாம் நிலை அவசரகால பேரிடர் மீட்பு நடவடிக்கை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

2024 ஜனவரி மாதத்திற்குப் பிறகு சீனாவில் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.

Bootstrap