ஹெப்ரோனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹெப்ரோனில் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை முழுமையாக முடக்குவதற்குத் தயாராகுமாறு இஸ்ரேலிய பிரதமர் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
ஒரு இராணுவச் சோதனைச் சாவடிக்கு அருகில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்பட்ட இரண்டு பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய படைகள் கொன்றதைத் தொடர்ந்து அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.