50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! ஐரோப்பா குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

ஐரோப்பாவில் இந்த ஆண்டு உச்சகட்ட வெப்பம் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஜூன், ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் ஐரோப்பாவின் 884 நகரங்களில் ஏற்பட்ட தொடர் வெப்ப அலைகளின் போது வெப்பம் தொடர்பான மரணங்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

அந்த ஆய்வில், முந்தைய மிக மோசமான கோடை காலமான 2022 ஆம் ஆண்டில் 29,480 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இந்த ஆண்டு 71 சதவீதம் அதிகமான மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

அதிக வெப்பநிலையால் 50,391 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 32,619 பேர் நிலக்கரி, எண்ணை மற்றும் எரிவாயு பயன்பாட்டால் உருவான கூடுதல் வெப்பத்தின் காரணமாகவே உயிரிழந்தனர்.

இந்த மரணங்களில் சுமார் 3 இல் ஒரு பங்கு, ஜூன் 17 ஆம் திகதி முதல் ஜூலை 1 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்து உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bootstrap