கருங்கடலில் தீப்பற்றி எரிந்த சரக்கு கப்பல் - மாலுமி உயிரிழப்பு

கருங்கடலில் சென்ற சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் மாயமாகியுள்ளனர்.

ருமேனியாவின் கான்ஸ்டண்டா நகரில் இருந்து 13 நாடிகல் மைல் தொலைவில் கருங்கடலில் இந்த சரக்கு கப்பல் சென்றுகொண்டிருந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த சரக்கு கப்பலில் 10 உக்ரைனியர்கள், 3 அசர்பைஜான் நாட்டினர் என மொத்தம் 13 மாலுமிகள் பயணித்துள்ளனர்.

இந்த தீ விபத்து குறித்து அறிந்த ருமேனியா கடற்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனாலும், இந்த தீ விபத்தில் மாலுமி உயிரிழந்தார். மேலும், 3 மாலுமிகள் மாயமாகினர். மாயமான 3 மாலுமிகளை தேடும் பணி துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Bootstrap