வனுவாட்டு அருகே 7.2 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள வனுவாட்டு தீவுகளுக்கு அருகே 7.2 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீற்றர் சுற்றளவில் அமைந்துள்ள கடலோரப் பகுதிகளை ஆபத்தான சுனாமி அலைகள் தாக்கக்கூடும் எனப் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (Pacific Tsunami Warning Center) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Bootstrap